பிரதமர் மோடி மீது செல்போன் வீச்சு; பேரணியில் பரபரப்பு - பரவும் வீடியோ
பிரதமர் மோடி வாகனம் மீது செல்போன் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரசாரம்
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு இடங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

அதன் படி, மைசூரில் பிரசார வாகனத்தில் நின்று ஊர்வலம் சென்றார். அப்போது அவருடன் பாஜக வேட்பாளர்கள், எம்பி பிரதாப் சிம்ஹா, முன்னாள் அமைச்சர் கேஎஸ் ஈஸ்வரப்பா உள்ளிட்டவர்கள் இருந்தனர். மோடி கையசைத்தபடி சென்று கொண்டிருந்தார்.
மொபைல் வீச்சு
அப்போது திடீரென கேஆர் சர்க்கிள் அருகே வாகனம் சென்று கொண்டிருந்தபோது, மோடியை நோக்கி செல்போன் ஒன்று வீசப்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
#WATCH | Security breach seen during Prime Minister Narendra Modi’s roadshow, a mobile phone was thrown on PM’s vehicle. More details awaited. pic.twitter.com/rnoPXeQZgB
— ANI (@ANI) April 30, 2023
அதில், செல்போன் பிரதமர் மீது விழவில்லை. மாறாக வாகனத்தின் மீது விழுந்தது.
அதனைத் தொடர்ந்து, போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் பேரணி நிற்கவில்லை. தொடர்ச்சியாக நடைபெற்றது.