பிரதமர் மோடியின் சகோதரர் குடும்பம் சென்ற கார் விபத்து!

Narendra Modi Karnataka Accident
By Sumathi Dec 28, 2022 05:57 AM GMT
Report

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி குடும்பத்துடன் காரில் சென்ற போது சாலை விபத்தில் சிக்கினர்.

கார் விபத்து

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி (66). தனது மனைவி, மகன் குடும்பத்தினருடன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு சுற்றுலா சென்றார்.

பிரதமர் மோடியின் சகோதரர் குடும்பம் சென்ற கார் விபத்து! | Pm Narendra Modi Brother Prahlad Modi Met Accident

அங்கு அரண்மனையை பார்த்துவிட்டு பந்திப்பூர் தேசிய உயிரியல் பூங்காவுக்கு மெர்சடிஸ் பென்ஸ் எஸ்யூவி காரில் சென்றார். கட்கலா என்ற இடத்தில் சென்றபோது கார் சாலையோர தடுப்பின் மீது மோதி விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் பிரஹலாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார்கள் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.