பட்ஜெட்டில் தனி கவனம் - பிரதமரின் SPG'க்கு ரூ.500 கோடியா?
நாட்டின் பிரதமரை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் SPG எனப்படுகிறார்கள்.
SPG
நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயமாகும். பல்வேறு நாடுகளுக்கு, இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் அவரின் பாதுகாப்பில் இந்த அரசு தனி கவனம் செலுத்துகிறது.
அதற்காக தனியாக நியமிக்கப்பட்டுள்ள குழு தான் Special Protection Group எனப்படும் SPG. இவர்களே பிரதமரின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம்.
இத்தனை கோடியா?
இப்படி செயல்படும் இவர்களுக்காக மத்திய பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சிறப்புப் பாதுகாப்புக் குழுவுக்கு ரூ. 506.32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த நிதியாண்டில் அதாவது 2023-24ல் ரூ.446.82 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.