திருமண அழைப்பிதழில் மோடியின் பெயர் - அன்பு மிகுதியில் செய்த மணமகனுக்கு வந்த சிக்கல்!
திருமண வரவேற்பிதழில் பிரதமர் மோடியின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமண அழைப்பித
கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு உட்பட்ட புத்தூர் தாலுகாவை சேர்ந்த உப்பினங்கடி காவல் துறையில் ஒரு புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், அண்மையில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகன் ஒருவர் தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு எதிராக நடந்து கொண்டார் என புகார் எழுந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

திருமணத்திற்காக அச்சடித்த வரவேற்பிதழில் மணமகன் ஒரு வரியை சேர்த்திருந்தார். அதாவது, பிரதமர் மோடியை மீண்டும் தேர்ந்தெடுப்பதே தம்பதிக்கு நீங்கள் அளிக்கும் சிறந்த பரிசாக இருக்கும் என இடம் பெற்றிருந்தது. இதை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்திடம் மணமகனுக்கு எதிராக உறவினரே புகார் அளித்துள்ளனர்.
பிரதமர் மோடி
இதையடுத்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் மணமகனின் வீட்டுக்கு விரைந்து சென்றனர். அப்போது அவர்களிடம், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே, மார்ச் 1-ந்தேதி திருமண வரவேற்பிதழ் அச்சடிக்கப்பட்டது. அந்த வரியானது, பிரதமர் மோடி மற்றும் நாட்டின் மீது கொண்ட அன்பால் சேர்க்கப்பட்டது என விளக்கம் அளித்திருக்கிறார்.

அந்த தம்பதிகளுக்கு கடந்த 18ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்கான விளக்கத்தை அவர் அளிக்கும்போது, கடந்த 26ம் தேதி போலீசில் தேர்தல் ஆணையம் புகார் ஒன்றை அளித்தது. எனவே எப்.ஐ.ஆர். ஒன்று பதிவு செய்யப்பட்டது.
திருமண வரவேற்பிதழை அச்சடித்த உரிமையாளரிடமும் தேர்தல் ஆணையம் மற்றும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திருமணம் முடிந்த சில நாட்களில்
தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கும், போலீசாரின் விசாரணைக்கும் மணமகன் சென்று வந்து கொண்டிருக்கிறார்.