விஜயகாந்த் உடல்நலம் குறித்து நலன் விசாரித்த பிரதமர் மோடி!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து பிரேமலதாவிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.
விஜயகாந்த்
நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணத்தால் வலது கால் விரல் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக தே.மு.தி.க. வெளியிட்ட அறிக்கையில், நீண்ட ஆண்டுகளாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் டாக்டரின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது.
பிரதமர் மோடி
மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் நலமாக இருக்கிறார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து பிரேமலதாவிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். விஜயகாந்துக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார்.
மேலும், விஜயகாந்த் விரைவில் குணமடைந்து ஆரோக்கியமாக வாழ பிரார்த்தனை செய்வதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது சிம்பிள் தான்.. அடுத்தடுத்து ஹனிமுன் ட்ரிப் ப்ளானில் நயன் - விக்கி?