ஆழ்கடலில் மூழ்கி தியானம் செய்த பிரதமர் மோடி; எதற்காக தெரியுமா? வைரலாகும் Video!
பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆழ்கடலில் மூழ்கி துவாரகாவை பார்வையிட்டு பிரார்த்தனை செய்தார்
பிரதமர் மோடி
குஜராத் மாநிலத்தில் அரபிக்கடலில் அமைந்த நகரம் துவாரகா. இந்த பகுதிக்கும் பகவான் கிருஷ்ணருக்கும் வலுவான தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த துவாரகா காலப்போக்கில் அரபிக்கடலுக்குள் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று துவாரகா நகர் மூழ்கியதாக கூறப்படும் இடத்துக்கு சென்று பூஜை செய்ய விரும்பினார். இதனையடுத்து ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் படகில் அரபிக்கடலுக்குள் பயணித்தார்.
அப்போது கடவுள் கிருஷ்ணருக்கு விருப்பமான மயிலிறகையும் அவர் கையில் எடுத்துச் சென்றார். பின்னர் ‛ஸ்கூபா டைவிங்' கருவிகளை உடலில் பொருத்தி ஆழ்கடலின் தரைப்பகுதிக்குள் சென்றார்.
தண்ணீரில் தியானம்
அவருக்கு ஸ்கூபா டைவிங் வீரர்கள் பாதுகாப்பாக உடன் சென்றனர். பின்னர் தான் கொண்டு சென்ற மயிலிறகை தரையில் வைத்து சிறப்பு பூஜை செய்தார். இதனையடுத்து அங்கு சிறிது நேரம் தண்ணீரில் தியானம் செய்தார்.
பின்னர் தரைப்பகுதியை தொட்டு வணங்கி பிரதமர் மோடி கடலிலிருந்து வெளியே வந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ‛‛ நீரில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரில் பிரார்த்தனை செய்தது தெய்வீக அனுபவமாக இருந்தது.
ஆன்மீக மகத்துவம் மற்றும் காலவரைமுறையற்ற பக்தி கொண்ட ஒரு பண்டைய சகாப்தத்துடன் நான் இணைந்திருப்பதை உணர்ந்தேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார்'' என தெரிவித்துள்ளார்.
"Hon'ble Prime Minister Shri" Narendra Modi in "Dwarka"#KrishnaJanmabhoomi #harekrishna next public destination! pic.twitter.com/JJduDy7hkw
— Karan patil (@KaranK897) February 25, 2024