அதிமுக உடனான உறவு முறிவு; தமிழகம் வரும் மோடி - பலே திட்டம்!
மோடியை தமிழ்நாட்டுக்கு அழைத்து வர பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
பிரதமர் மோடி
மாநிலத் தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு கட்சியை வலுப்படுத்தி வருகிறார்.
தொடர்ந்து, அதிமுக உடனான தேர்தல் உறவு முறித்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பாஜகவை நிலைநாட்ட தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும், மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாடு , கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கணிசமான வெற்றியை பெற பல்வேறு வியூகங்களை பாஜக வகுத்துள்ளது.
பாஜக திட்டம்
இந்தப் பயணத்தின்போது, பாம்பன் அருகே கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தின் ஒரு பகுதியை திறந்து வைக்கவும், குலசேகரப்பட்டினம் அருகே அமைய உள்ள இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்ட வருகை தரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதனையொட்டி, டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ளதாக கூறப்படுகிறது. அதனையடுத்து, ஜனவரியில் கூட்டணி கட்சிகள் குறித்த ஆலோசனை, மார்ச்சில் தேர்தல் பிரச்சாரம் அவரது பயணத்திட்டங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.