வயநாடு நிலச்சரிவு : ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி ஆய்வு!
கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
வயநாடு நிலச்சரிவு
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து சூரல்மலா, முண்டக்கை, அட்டமலா, பூஞ்சேரிமட்டம் உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.மொத்தம் 1,208 வீடுகள் இடிந்து விழுந்து மண்ணில் புதைந்தனர். இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1000க்கும் மேல் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நிலச்சரிவில் புதையுண்ட சடலங்களை தேடும் பணி, சடலங்களை அப்புறப்படுத்தும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் இந்திய ராணுவம் ஆகியவை பாலம் அமைத்தல் போன்ற பிற பணிகளுக்கு உதவுவது என முழு ஈடுபாட்டுடன் பணிகளை செய்தது.
கேரளா வயநாட்டில் அடுத்தடுத்து 2 நிலச்சரிவுகள் - மண்ணில் புதைந்த 100'க்கும் மேற்பட்டோர் - 20 உடல்கள் மீட்பு!!
பிரதமர் மோடி
இந்த நிலையில், பிரதமர் மோடி தனி விமானம் மூலம் கேரள மாநிலம் கண்ணூர் சென்றடைந்தார்.அப்போது முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, கேரளா ஆளுநர் ஆரிப் முகமது உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம், நிலச்சரிவுக்குள்ளான இருவழிஞ்சி ஆற்றுப் பகுதிகள் மற்றும் மோசமாக பாதிக்கப்பட்ட பூஞ்சேரிமட்டம், முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளையும் பார்வையிட்டார். பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.