8வது முறையாக பிரதமர் மோடி வருகை - தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறுமா பாஜக?
பிரதமர் நரேந்திர மோடி வாக்கு சேகரிப்பதற்காக 8-வது முறையாக தமிழ்நாடு வருகிறார்.
8வது முறையாக மோடி
இந்த ஆண்டின் மக்களவை தேர்தல் தேதி நெருங்கியுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகளும், முக்கிய தலைவர்களும் தீவிர வாகு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேர்தல் அறிவித்த தொடக்கத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இன்று வாக்கு சேகரிக்க உள்ளார். இதுவரை பரப்புரை மேற்கொள்ள 8-வது முறையாக வரும் பிரதமர் மோடி, அம்மாவட்டத்தில் நடக்க இருக்கும் பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.
சக்தியாக மாறுமா பாஜக?
இதற்காக, திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை 4:10 மணிக்கு அகஸ்தியர்பட்டிக்கு வரவுள்ளார். மாலை 4:20 மணி முதல் 5:00 மணி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இதை தொடர்ந்து அவர் தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். பிரதமர் வருகையையொட்டி பல பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த தேர்தலில் பாஜக தமிழகத்தில் வெற்றி பெற அதிக ஆர்வத்துடன் இருப்பதாக தெரிகிறது. வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழ்நாட்டில் களத்தில் உள்ள இரு திராவிட சக்திகளுக்கு இணையாக தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக இடம்பெற வேண்டும் என்பதே கட்சியின் இலக்காக உள்ளது என்றும் பிரதமர் மோடி மீண்டு மீண்டும் தமிழகம் வருவதற்கு இதுதான் பின்னணி என்று பாஜக தலைவர்கள் கூறுகின்றனர்.