Scan பண்ணுங்க,Scam பாருங்க; பாஜகவின் ஊழல்கள் - நவீன முறையில் திமுக பிரச்சாரம்!

DMK BJP Lok Sabha Election 2024
By Swetha Apr 12, 2024 06:35 AM GMT
Report

பாஜகவின் ஊழல்கள் பற்றி நவீன உத்தி மூலம் திமுக பதிலடி குடுத்துள்ளது.

பாஜகவின் ஊழல்கள்

இந்த ஆண்டின் மக்களவை தேர்தல் தேதி நெருங்கியுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Scan பண்ணுங்க,Scam பாருங்க; பாஜகவின் ஊழல்கள் - நவீன முறையில் திமுக பிரச்சாரம்! | Dmk Hi Tech Campaign Against Bjp

குறிப்பாக தமிழ்நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, நிர்மலா சீதாராமன் என ஒரு பெரிய படையே பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் திமுக ஒரு ஊழல் கட்சி என்பதை முக்கியமாக முன்வைத்து மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

திமுக - காங்கிரஸ் செய்த பாவங்கள் - அவர்கள் பலனை அனுபவிப்பார்கள் - பிரதமர் மோடி

திமுக - காங்கிரஸ் செய்த பாவங்கள் - அவர்கள் பலனை அனுபவிப்பார்கள் - பிரதமர் மோடி

திமுக விமர்சனம்

குறிப்பாக 2 ஜி விவகாரத்தை தற்போதும் கையில் எடுத்து திமுகவை விமர்சித்து வருகின்றனர். இப்படியாக தொடர் விமர்சனத்துக்கு ஆளான திமுக தற்போது பாஜகவுக்கு நவீன முறையில் பதில் அளித்துள்ளது.

Scan பண்ணுங்க,Scam பாருங்க; பாஜகவின் ஊழல்கள் - நவீன முறையில் திமுக பிரச்சாரம்! | Dmk Hi Tech Campaign Against Bjp

மத்திய அரசை விமர்சிக்கும் விதமாக அமைந்த இது இளைஞர்கள் மத்தியில் வெகுவாக கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், பல்வேறு இடங்களில் பிரதமர் மோடி புகைப்படத்துடன் உள்ள "ஜி PAY.. Scan பண்ணுங்க.. Scam பாருங்க" என்ற வாசகங்கள் எழுதப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில் உள்ள QR கோடை ஸ்கேன் செய்தால், பாஜக மீது திமுக குற்றம் சாட்டிவரும் தேர்தல் பத்திர ஊழல், சுங்கச்சாவடி முறைகேடு, பாரத்மாலா, துவாராகா விரைவு பாலம் கட்டுமானம் என ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை குறித்த விவரங்களை வெளிப்படுத்தும் வீடியோ ஓடத் தொடங்குகிறது. இந்த போஸ்டர் இந்திய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.