திமுக - காங்கிரஸ் செய்த பாவங்கள் - அவர்கள் பலனை அனுபவிப்பார்கள் - பிரதமர் மோடி
கன்னியாகுமரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா கூட்டணி கட்சிகளின் கர்வத்தை தமிழகம் அடக்கும் என தெரிவித்துள்ளார்.
கன்னியகுமாரியில் மோடி
மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படும் நிலையில், இன்று தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி, இன்று கன்னியாகுமரி வந்து பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது வருமாறு,
வரும் மக்களவை தேர்தலில் மக்களை கொள்ளையடிக்கவே எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க நினைக்கிறார்கள். இந்தியா கூட்டணி கட்சிகளின் கர்வத்தை தமிழகம் அடக்கும். நாட்டை துண்டாட வேண்டும் என்று நினைத்தவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள்.
திமுக காங்கிரஸ் கூட்டணி கன்னியாகுமரி மக்களை வஞ்சிக்கிறது, ஆனால் பாஜக கன்னியாகுமரி மக்களை நேசிக்கிறது. மத்திய அரசு மீனவ மக்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இலங்கையில் நமது மீனவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.
குடும்ப ஆட்சி
பாஜக எடுத்த நடவடிக்கைகளால் மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர். இந்தப் பாவத்தை செய்தது நீங்களோ, நானோ அல்ல. திமுக - காங்கிரஸ். திமுக - கங்கிரஸ் செய்த தவறுக்கு கணக்கு கூற வேண்டும். செய்த பாவங்களுக்காக திமுக - காங்கிரஸ் பலனை அனுபவிப்பார்கள்.
துறைமுக கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்தில் மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ரூ.50,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை பணிகளும், ரூ.70,000 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.
குடும்ப ஆட்சி தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டும். காங்கிரஸ்,திமுக கூட்டணி வரும் மக்களவைத் தேர்தலில் முற்றிலும் துடைத்தெறியப்படும். கன்னியாகுமரியில் இருந்து கிளம்பியுள்ள அலை நீண்டதூரம் பயணிக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.