மீண்டும் நிலச்சரிவு; நடுங்கவைக்கும் காட்சிகள் - வயநாடு செல்லும் பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி இன்று வயநாடு செல்கிறார்.
நிலச்சரிவு
கேரளா, வயநாடு பகுதியில் பெருமழை காரணமாக கடந்த 30-ம் தேதி அதிகாலை நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதன்காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன.
இதுவரை 427 பேர் உயிரிழந்துள்ளனர். 273 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 138 பேரை காணவில்லை. நேற்று மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தது. இதுகுறித்த காட்சிகள் வெளியாகி நெஞ்சை உலுக்கியது.
பிரதமர் மோடி ஆய்வு
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வயநாடு செல்கிறார். நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து பேச உள்ளார். நிலச்சரிவில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரையும் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
அதன்பின், மோடி தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கிடையில் நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் வருகையால் கல்பேட்டை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.