இந்த 4 மந்திரங்களை கடைபிடிக்க வேண்டும் - அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
புதிய மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை தெரிவித்துள்ளார்.
புதிய மத்திய அமைச்சர்கள்
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் தனது அமைச்சரவையில் முதன்முறையாக சேர்க்கப்பட்ட அமைச்சர்களை சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து மத்திய அரசின் வட்டாரங்கள் கூறுகையில், செயல், சீர்திருத்தம், மாற்றம், தகவல் என்ற நான்கு புதிய மந்திரங்களை மக்கள் சேவையின்போது அமைச்சரவை சகாக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
மோடி அறிவுரை
மத்திய அரசு பொறுப்புடன் செயல்படுகிறது என்ற செய்தியை சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதேநேரம், சமூக ஊடகங்களில் மக்களின் பங்கேற்பையும் அதிகரிக்க வேண்டும். மோடி அரசு மூன்றாவது முறையாக பதவியேற்று 100 நாட்களை நிறைவு செய்யும்போது அந்தந்தஅமைச்சகங்களின் 10 முக்கியமுடிவுகள் குறித்து தகவல்களை வழங்கவும்,
அவற்றை வெகுஜன மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கேபினட் செயலர் ராஜீவ் கவுபா, பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற 85 நாட்களில் இதுவரை எடுக்கப்பட்ட 73 முக்கிய முடிவுகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.