பயிற்சியாளர் பதவிக்கு விண்ணபித்த பிரதமர் மோடி, அமித் ஷா..? குழப்பத்தில் BCCI

Cricket Narendra Modi India Indian Cricket Team
By Jiyath May 28, 2024 06:35 AM GMT
Report

பிரதமர் மோடி உள்பட பிரபலங்கள் பலரின் பெயரில் போலி விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால் தேர்வுக்குழு குழப்பம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலி விண்ணப்பங்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் இருந்து வருகிறார். இவரின் பதவிக்காலம் வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவடைகிறது. இதனால் புதிய பயிற்சியாளரை நியமிப்பதற்கான விண்ணப்பத்தை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது.

பயிற்சியாளர் பதவிக்கு விண்ணபித்த பிரதமர் மோடி, அமித் ஷா..? குழப்பத்தில் BCCI | Pm Modi Applied Coach Indian Team Bcci Confusion

இந்த பதவிக்கு முன்னாள் வீரர்கள் பலர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி உள்பட பிரபலங்கள் பலரின் பெயரில் போலி விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால் தேர்வுக்குழு குழப்பம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SRH படு தோல்வி: கதறி அழுத காவ்யா மாறன் - ட்ரெஸ்ஸிங் ரூமில் சொன்ன விஷயங்கள்..?

SRH படு தோல்வி: கதறி அழுத காவ்யா மாறன் - ட்ரெஸ்ஸிங் ரூமில் சொன்ன விஷயங்கள்..?

பெரும் குழப்பம்

குறிப்பாக நரேந்திர மோடி, அமித்ஷா, சச்சின் டெண்டுல்கர், விரேந்தர சேவாக் என்ற பெயர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு போலி விண்ணப்பங்கள் குவிந்துள்ளது.

பயிற்சியாளர் பதவிக்கு விண்ணபித்த பிரதமர் மோடி, அமித் ஷா..? குழப்பத்தில் BCCI | Pm Modi Applied Coach Indian Team Bcci Confusion

மேலும், மொத்தம் 3000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக இதில் எது உண்மையான விண்ணப்பம் என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் கூகுள் ஃபார்ம் மூலமாக பெறப்பட்டதால் போலி விண்ணப்பங்கள் அதிகளவில் பெறப்பட்டுள்ளன. இதனால் தேர்வுக்குழு பெரும் குழப்பம் அடைந்துள்ளதாக தெரிகிறது.