3 நாட்கள் திடீரென தமிழகம் வரும் பிரதமர் மோடி - என்ன காரணம்?
மூன்று நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி கடந்த ஜனவரி 2-ம் தேதி திருச்சிக்கு வந்து, விமான நிலைய புதிய முனையம் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்பின், ஜனவரி 19-ம் தேதி சென்னையில் கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, 3வது முறையாக பிப்ரவரி 27-ம் தேதி பல்லடத்தில் நடந்த ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்திலும், மதுரையில் நடந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
தமிழகம் வருகை
அதனையடுத்து 4வது முறையாக கடந்த 4-ம் தேதி தமிழகம் வந்த மோடி, கல்பாக்கத்தில் விரைவு ஈனுலையை தொடங்கி வைத்தார். இந்நிலையில், 5-வது முறையாக மூன்று நாள் சுற்றுப்பயணமாக மார்ச் 15ம் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சேலத்துக்கு வரும் பிரதமர், அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மார்ச் 16-ம் தேதி கன்னியாகுமரியில் தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மக்களவை தொகுதிகளுக்கு பரப்புரை மேற்கொள்கிறார்.
அதன்பின், கோவையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஏற்கெனவே வருகிற 22ம் தேதி பிரதமர் தமிழகம் வருவார் எனக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.