கீழ இறங்குங்க முதல்ல.. சீறிய பிரதமர் மோடி - அதிர்ந்த பவன் கல்யாண்!
கோபரத்தின் மீது ஏறிய இளைஞர்களை பிரதமர் மோடி திட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடி
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில்,
ஆந்திராவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உடனிருந்தனர்.
இந்நிலையில் அதில் பவன் கல்யாண் பேசிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த சிலர் அங்கு வைக்கப்பட்டிருந்த உயரமான விளக்கு கோபுரத்தின் மீது கூட்டமாக ஏறியுள்ளனர். அப்போது சட்டென எழுந்த மோடி, பவன் கல்யாண் பேசிக் கொண்டிருந்த போதே அவரது மைக்கை வாங்கி,
ஷாக் ஆன பவன்
"ஏய்.. தம்பிகளா அங்கே என்ன செய்றீங்க.. உங்க தலைக்கு மேலே மின்சார கம்பிகள் இருப்பது உங்களுக்கு தெரியவில்லையா.. இப்படி எல்லாம் செய்யக் கூடாது.. பாருங்க.. உங்களை நிருபர்கள் போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கீழே இறங்குங்கள். காவலர்களே, மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனியுங்கள்.
அசம்பாவிதம் ஏதும் நடந்தால் கஷ்டமாகிவிடும்" எனத் தெரிவித்தார்.
உடனே, இளைஞர்கள் கீழே இறங்கினர். இதனைப் பார்த்த மேடையில் இருந்த பவன் கல்யாணும், சந்திரபாபு நாயுடும் சிறிது நேரம் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.