தனிப்பெரும்பான்மை இழப்பு; மோடி பதவி விலகனும் - ஜெய்ராம் ரமேஷ்
பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி
இந்தியா முழுவதும் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 540 தொகுதிகளிலும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 328 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது.
ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்
இந்நிலையில், மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் பல இடங்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்,
"பிரதமர் மோடி தன்னை ஒரு அசாதாரணமான மனிதரைப் போல் காட்டிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் முன்னாள் பிரதமராக மாறப்போகிறார் என்பதையே தேர்தல் முடிவுகள் நிரூபிக்கின்றன.
अपने आप को अभूतपूर्व होने का दिखावा करते थे।
— Jairam Ramesh (@Jairam_Ramesh) June 4, 2024
अब साबित हो गया है कि निवर्तमान प्रधानमंत्री भूतपूर्व होने वाले हैं।
नैतिक ज़िम्मेदारी लें और इस्तीफ़ा दें। यही इस चुनाव का संदेश है।
அவர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். இதுவே இந்த தேர்தலின் மூலம் கிடைத்துள்ள செய்தி." எனக் குறிப்பிட்டுள்ளார்.