மற்ற கட்சியின் அறிக்கை போல இல்லை;பாஜக சொல்வதை செய்யும்- பிரதமர் மோடி பேச்சு!

Narendra Modi Rajasthan Lok Sabha Election 2024
By Swetha Apr 06, 2024 06:00 AM GMT
Report

மற்ற கட்சிகளை போல வெறும் தேர்தல் அறிக்கையை வெளியிட மாட்டோம், தீர்மான அறிக்கையாக வாக்குறுதி வழங்குவோம் பிரதமர் மோடி கூறியுள்ளார். 

பிரதமர் மோடி பேச்சு

நடப்பாண்டின் மக்களவை தேர்தல் காலம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மற்ற கட்சியின் அறிக்கை போல இல்லை;பாஜக சொல்வதை செய்யும்- பிரதமர் மோடி பேச்சு! | Pm Modi Says Unlike Other Partys Bjp Do Manifesto

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார்.

அப்போதும் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில், நாடு மாற்றமடைவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். 10 வருடங்களுக்கு முன் நாட்டின் நிலை எவ்வளவு மோசமாக இருந்தது நினைவிருக்கிறதா?

ராகுல் vs மோடி?அடுத்த பிரதமர் யார்? தமிழக மக்களின் அதிரடி கருத்துக்கணிப்பு

ராகுல் vs மோடி?அடுத்த பிரதமர் யார்? தமிழக மக்களின் அதிரடி கருத்துக்கணிப்பு

மற்ற கட்சி அறிக்கை

காங்கிரஸின் பெரிய ஊழல்கள் மற்றும் கொள்ளையினால், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, உலகளவில் இந்தியாவின் நற்பெயர் சரிந்தது.

மற்ற கட்சியின் அறிக்கை போல இல்லை;பாஜக சொல்வதை செய்யும்- பிரதமர் மோடி பேச்சு! | Pm Modi Says Unlike Other Partys Bjp Do Manifesto

நாங்கள் நேர்மையாக வேலை செய்தோம். கோவிட் போன்ற ஒரு பெரிய நெருக்கடி வந்தபோது, இந்தியா அழிந்துவிடும் என நினைத்தனர். ஆனால் அந்த நெருக்கடியிலும் உலகின் 5வது பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றினோம்.

பா.ஜனதா நிச்சயம் சொல்வதை செய்யும். மற்ற கட்சிகளை போல வெறும் தேர்தல் அறிக்கையை மட்டும் வெளியிட மாட்டோம். தீர்மான அறிக்கையாக வாக்குறுதி வழங்குவோம். 2019ல் நாங்கள் அளித்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன" இவ்வாறு தெரிவித்துள்ளார்.