ராகுல் vs மோடி?அடுத்த பிரதமர் யார்? தமிழக மக்களின் அதிரடி கருத்துக்கணிப்பு
இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வேண்டும் என நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தமிழக மக்கள் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல்
இந்தியாவில் அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. 10 ஆண்டுக்காலத்தை தாண்டி மீண்டும் ஆட்சியை பிடித்திட பாஜகவும், தவறவிட்ட ஆட்சியை மீண்டும் கைப்பற்றிட காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக காங்கிரஸ் கட்சி எப்போதும் இல்லாத வகையில் 26 கட்சிகளை ஒன்றிணைந்து காங்கிரஸ் இந்த தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றது. அதே போல பாஜகவும் தன்னுடைய ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு மாநில கட்சிகளை ஒன்றிணைத்து வருகின்றது.
கருத்துக்கணிப்பு
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி தற்போது யார் அடுத்த பிரதமராக வர வேண்டும் என தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாதமாதம் நடத்தி வருகின்றது. அதில் இந்த மாதம் அதாவது ஜூலை மாதத்தில் ஏழை மக்களின் வாழ்வு மேம்பட, கல்வி, சுகாதாரம் போன்றவற்றின் உள்கட்டமைப்பு மேம்பட யார் பிரதமராக வேண்டுமென்ற கேள்விக்கு 65 % மக்கள் ராகுல் காந்தியையே தேர்வு செய்துள்ளனர்.
மாதாமாதம் அந்நிறுவனம் சார்பில் நடத்தப்படும் இந்த கருத்துக்கணிப்பில், கடந்த மே மாதம் 64 % மக்களும், கடந்த ஜூன் மாதம் 66 % மக்களும் இம்மாதம் 65 % மக்களும் ராகுல் காந்தியே பிரதமராகவேண்டும் என விரும்புகின்றனர். இதில் எந்த வித மாற்றமும் இன்றி தற்போதைய பிரதமர் மோடி தொடர்ந்து 3 மாதங்களாக 34 % நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவு என்பதால் தேசிய அளவில் இதில் கணிசமான வித்தியாசங்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.