இந்திய பொருளாதாரம் 90% வளர்ச்சியடைந்துள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியாவின் செழிப்பில்தான், உலகின் செழிப்பு அடங்கியுள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மோடி
டெல்லியில் ET World Leaders Forum நடத்திய நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அதில், "இந்தியா ஒரு தனித்துவமான வெற்றிக் கதையை எழுதி வருகிறது" என பேசினார்.
மேலும், "கடந்த 10 ஆண்டுகளில் உலகப் பொருளாதாரம் 35% வளர்ச்சியடைந்துள்ளது, ஆனால் இந்திய பொருளாதாரம் கிட்டத்தட்ட 90% வளர்ச்சியடைந்துள்ளது. இது நாம் அடைந்த நிலையான வளர்ச்சியாகும். இந்த நிலையான வளர்ச்சி எதிர்காலத்திலும் தொடரும்.
இந்தியா
தேர்தல் நடைபெற்ற பெரும்பாலான நாடுகளில் மக்கள் மாற்றத்திற்க்காக வாக்களித்துள்ளனர். ஆனால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி, அரசியல் ஸ்திரத்தன்மைக்காக வாக்களித்துள்ளனர். 60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு அரசை மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
இன்றைய இந்தியா வாய்ப்புகளின் மிகப் பெரிய நிலமாக உள்ளது. எனவே, ஒவ்வொரு துறையிலும் தலைவராக இந்தியா உருவெடுக்க வேண்டியது அவசியம். 21-ஆம் நூற்றாண்டின் தற்போதைய மூன்றாவது தசாப்தம் இந்தியாவின் எழுச்சிக்கான காலகட்டமாகும்.
இன்றைய இந்தியா செல்வத்தை உருவாக்குபவர்களை மதிக்கிறது. வலிமையான இந்தியாவால் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பெரிய வளர்ச்சியை கொண்டு வர முடியும். இந்தியாவின் செழிப்பில்தான், உலகின் செழிப்பு அடங்கியுள்ளது" என பேசினார்.