லட்சத்தீவில் Vibe செய்த பிரதமர் மோடி - வாக்கிங்கில் தொடங்கி ஸ்கூபா டைவிங் வரை.!

Narendra Modi Viral Photos
By Sumathi Jan 05, 2024 06:29 AM GMT
Report

 பிரதமர் மோடி லட்சத்தீவிற்கு பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி அண்மையில் திருச்சியில் புதிய ஒருங்கிணைந்த விமான நிலையம் உட்பட பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தார். பின்னர் அன்றே நரேந்திர மோடி லட்சத்தீவிற்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது.

pm modi

அதனைத்தொடர்ந்து லட்சத்தீவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார். அதன்பின் அந்த பயணம் குறித்து தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, சமீபத்தில் லட்சத்தீவு மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அரசியலிலும் அவர் கேப்டன் தான் - விஜயகாந்திற்கு பிரதமர் மோடி புகழாரம்..!!

அரசியலிலும் அவர் கேப்டன் தான் - விஜயகாந்திற்கு பிரதமர் மோடி புகழாரம்..!!

லட்சத்தீவு பயணம்

அந்த தீவின் பிரமிக்க வைக்கும் இயற்கை அழகையும் மக்களின் நம்பமுடியாத அரவணைப்பையும் என்னை பிரமிப்பிற்கு உண்டாக்கியது. மேலும் அகத்தி, பங்காரம், கவர்த்தி பகுதிகளில் உள்ள மக்களின் விருந்தோம்பலுக்கு நன்றி கூறிக்கொள்கின்றேன். அங்குள்ள மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம்.

modi-s-lakshadweep-trip

எதிர்காலத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு, சிறந்த சுகாதாரம், அதிவேக இணையம் மற்றும் சுத்தமான குடிநீர் ஆகியவற்றை உருவாக்கவும், அதேநேரம் உள்ளூர் கலாச்சாரத்தைப் பாதுகாத்துக் கொண்டாட வேண்டும் என்பதில் கவனமாக உள்ளோம். இதனை கருத்தில்க்கொண்டே புதிய திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். அரசின் பல்வேறு திட்டங்களால் பயனடைந்தோரிடம் உரையாடினேன்.

எங்கள் முயற்சிகள் சிறந்த சுகாதாரம், மக்களுக்குத் தன்னம்பிக்கை, பெண்களுக்கு அதிகாரமளித்தல், விவசாயம் எனப் பல துறைகளில் வளர்ச்சிக்கு உதவுவதை நேரடியாகப் பார்ப்பது மகிழ்ச்சி தருகிறது. 140 கோடி இந்தியர்களின் நலனுக்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்பது குறித்துச் சிந்திக்க இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பை கொடுத்தது.

புதுப்புது சாகசங்களை விரும்புவோர் நிச்சயம் லட்சத்தீவுக்கு செல்ல வேண்டும். லட்சத்திவீல் ஸ்கூபா டைவிங் செய்தேன். அது மிகவும் அருமையாக இருந்தது. அதிகாலையில் லட்சத்தீவின் அழகிய கடற்கரையில் நடைப்பயணம் மேற்கொண்டது மிகச்சிறந்த அனுபவத்தை அளித்தது. லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல; அது மக்களின் பாரம்பரியம் மற்றும் அன்பிற்குச் அடையாளமாக உள்ள இடம்.

இந்த பயணம் அன்நினைவில் எப்போது நினைவில் இருக்கும். லட்சத்தீவில் பயணம் மேற்கொண்ட போது அங்கு எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார். இந்த பயணத்தில் 1,150 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கிவைத்தது குறிப்பிடதக்கது.