Breaking News : தேர்தல் முடிவு எதிரொலி - பிரதமர் பதவி ராஜினாமா..அமைச்சரைவையும் கலைத்தார் மோடி
17-வது மக்களவை அமைச்சரவையை கலைக்க குடியரசு தலைவரிடம் பரிந்துரைந்தார் பிரதமர் மோடி.
மக்களவை தேர்தல்
முடிவுகள் 18-வது மக்களவைக்கான முடிவுகள் நேற்று வெளிவந்தன. 543 இடங்களிலில் எக்கட்சிக்குமே பெருபான்மை கிடைக்கவில்லை. தனி கட்சியாக பாஜக 240 இடங்களை வென்றுள்ளது.
அக்கூட்டணி மொத்தமாக 293 இடங்களை பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி 234 இடங்களை வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி நாட்டில் இரண்டாவது பெரிய கட்சியாக 99 இடங்களை வென்றுள்ளது.
ராஜினாமா
நாட்டில் ஆட்சியமைக்க தேவைப்படும் 272 இடங்களை எக்கட்சியும் பெற்றிராத நிலையில், கூட்டணி கணக்குகள் நாட்டில் துவங்கியுள்ளன. இன்று டெல்லியில் இரு கூட்டணி தலைவர்கள் கூட்டமும் நடந்து வருகின்றது.
Breaking News : டெல்லிக்கு ஒரே விமானத்தில் கிளம்பிய நிதிஷ் குமார் - தேஜஸ்வி யாதவ்!! மாறும் கூட்டணி நிலவரம்?
நடைபெற்று முடிந்த கூட்டத்திற்கு பிறகு, 17-வது மத்திய அமைச்சரவையை கலைக்கும் படி, மோடி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதே நேரத்தில் தனது பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்யும் பிரதமர் மோடி, உடனே ஆட்சி அமைக்க குடியரசு தலைவரிடம் கோரவுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
மீண்டும் பிரதமராக மோடி வரும் 8-ஆம் தேதி பதவி ஏற்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அது வரை மோடியே நாட்டின் காபந்து பிரதமராக தொடருவார்.