Breaking News : டெல்லிக்கு ஒரே விமானத்தில் கிளம்பிய நிதிஷ் குமார் - தேஜஸ்வி யாதவ்!! மாறும் கூட்டணி நிலவரம்?
டெல்லி புறப்பட்டுள்ள இரு தலைவர்களும் ஒரே விமானத்தில் பயணிக்கிறார்கள்.
இந்தியா கூட்டணி
நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மீண்டும் தனது இருப்பை வலுவாக பதிவு செய்துள்ள காங்கிரஸ், 99 இடங்களை கைப்பற்றியுள்ளது.
காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி 234 இடங்களை கைப்பற்றியுள்ளது.தேசிய ஜனநாயக கூட்டணியின் 3-வது ஆட்சி கனவை தகர்த்த இந்த கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.
ஜனதா தள் கட்சி தற்போது பீகார் மாநிலத்தில் பாஜக ஆதரவில் தான் ஆட்சி செய்து வருகின்றது. இந்தியா கூட்டணி உருவானதும் கூட்டணியை விட்டு விலகி கடைசி நேரத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார் நிதிஷ்.
ஒரே விமானத்தில்
தற்போது அவரே மத்தியில் எக்கூட்டணி ஆட்சி செய்யவேண்டுமென முடிவு செய்யும் கிங் மேக்கராக மாறியுள்ளார். இன்று இந்தியா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.
இதில், பங்கேற்க நிதிஷ் குமார் - தேஜஸ்வி யாதவ் இருவருமே டெல்லி புறப்பட்டுள்ளனர். இரு துருவங்களாக இருப்பவர்கள் ஒரே விமானத்தில் பயணிப்பது பெரும் செய்தியானது.
ஆனால், பீகாரில் இருந்து டெல்லிக்கு அதிக விமானங்கள் இல்லாத காரணத்தால், அவர்கள் ஒரே விமானத்தில் பயணிக்கிறார்கள் என தகவல் வெளிவந்துள்ளது.
இது கூட்டணி அறிவிப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.