ரூ.1க்கு சானிட்டரி நாப்கின்; 3 கோடி பேருக்கு இலவச வீடு - பாஜக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!
பாஜக தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
பாஜக
மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோர் வெளியிட்டனர்.
அதில், பிஎம் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் இதுவரை 4 கோடி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் மேலும் 3 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
தேர்தல் அறிக்கை
மக்கள் மருந்தகங்களில் பெண்களுக்கு ரூ.1 விலையில் சானிட்டரி நாப்கின் வழங்கப்படும். நாடு முழுவதும் பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த பொதுவான வாக்காளர் பட்டியல் கொண்டு வரப்படும்.
2036ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை. 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுப்படுத்தப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் வரை இலவசமாக மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம்.
5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். மக்கள் மருந்தகத்தில் 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும்.
மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் திருநங்கைகள் இணைக்கப்படுவர். கிராமங்களுக்கு பைப் லைன் மூலம் எரிவாயு விநியோகம்.