மதமாற்ற திருமணம் செய்பவர்களுக்கு 10 ஆண்டு சிறை, ₨1 லட்சம் அபராதம் : பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு

election utrapradesh UPElections2022 BJPManifesto
By Irumporai Feb 08, 2022 09:13 AM GMT
Report

உத்தர பிரதேச மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 14, 20, 23, 27, மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில்  உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையினை உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்

.அந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் : 

லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு பத்தாண்டு தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்

அடுத்த ஐந்தாண்டுகளில் விவசாயிகளுக்கு பாசனத்திற்கு இலவச மின்சாரம்

விவசாயிகளுக்கு 14 நாட்களில் கரும்புத் தொகை வழங்கப்படாவிட்டால், சர்க்கரை ஆலைகள் வட்டியுடன் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும்.

மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த உள்கட்டமைப்புடன் கூடிய அரசு மருத்துவமனை கட்டப்படும் 

அடுத்த 5 ஆண்டுகளில், கோதுமை மற்றும் நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உறுதிப்படுத்தப்படும் 

திறமையான மாணவிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற, ராணி லக்ஷ்மிபாய் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும். 

சுவாமி விவேகானந்த் யுவ ஷசக்திகரன் யோஜனா திட்டத்தின் கீழ் இரண்டு கோடி டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும். * மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் 

ஹோலி, தீபாவளி ஆகிய பண்டிகைகளுக்கு 2 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்

60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பஸ் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் 

மீரட், ராம்பூர், கான்பூர் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாத எதிர்ப்பு கமாண்டோ படைகள் அமைக்கப்படும். மேற்கண்ட முக்கிய அம்சங்கள், உத்தர பிரதேச தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.