பிரதமர் மோடியின் உண்மையான குடும்பம் இதுதான் - போஸ்டரால் பரபரப்பு!
பிரதமர் மோடியின் குடும்பம் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவை விட்டு தப்பியோடிய தொழிலதிபர்கள் நீரவ் மோ, விஜய் மல்லையா ஆகியோருடன் இருப்பது போன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும், அதில் 'மோடி கா அஸ்லி பரிவார்' (மோடியின் உண்மையான குடும்பம்) என்ற தலைப்பில் பாரதிய யுவா காங்கிரஸ் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போஸ்டரால் சர்ச்சை
முன்னதாக மார்ச் 4-ம் தேதியன்று ஒரு கூட்டத்தில் மோடி, "150 கோடி இந்தியர்கள் தான் எனது குடும்பம்" எனப் பேசியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
◆ Rapists
— Indian Youth Congress (@IYC) March 5, 2024
◆ Terrorist
◆ Hate Mongers
◆ Absconders
◆ Murderers
????? ???? - ????? ???????#ModiKaAsliParivar pic.twitter.com/l8skf2XqcY
இதனைத் தொடர்ந்து, புதுடெல்லி மாநகராட்சி மாமன்ற அதிகாரி அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன என காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த சுவரொட்டியை இளைஞர் காங்கிரஸார் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.