நான் தமிழ்நாட்டுக்கு வந்தால் சிலர் வயிற்றில் புளியை கரைக்கிறது - பிரதமர் மோடி தாக்கு!
மத்திய அரசு செய்து வரும் நலத்திட்டங்களுக்கு தி.மு.க அரசு இடையூறாக இருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார். அதில் "இந்தியாவின் வளர்ச்சியில் சென்னை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

சமீபகாலத்தில் சென்னை வரும் போது சிலருக்கு வயிற்றிலே புளியை கரைக்கிறது. வளர்ச்சி அடைந்த பாரதத்தோடு வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டையும் இலக்காக கொண்டு இருக்கிறேன். சென்னை போன்ற நகரங்களின் வளர்ச்சிக்காக பாஜக அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
திமுக இடையூறாக இருக்கிறது
சென்னை வளர்ச்சி திட்டங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. மத்திய அரசு செய்து வரும் நலத்திட்டங்களுக்கு தி.மு.க அரசு இடையூறாக இருக்கிறது. இயற்கை பேரிடர் ஏற்பட்ட போது மக்களுக்கு உதவுவதற்கு பதிலாக விளம்பரம் மட்டுமே செய்தார்கள்.

நீங்கள் துன்பத்திலிருந்த போது தி.மு.க உங்களுக்கு உதவி செய்யவில்லை. தி.மு.க அரசு சென்னை மக்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கவில்லை. மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு உங்கள் வேதனையை புரிந்து கொள்கிறது. உங்களுக்காக பணியாற்றுகிறது" என்று பேசி வருகிறார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan