உங்களைபோல நானும் ரசித்தேன்...ட்ரெண்டான ஏ.ஐ நடனம் - பாராட்டி தள்ளிய பிரதமர் மோடி!
ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரதமர் மோடி நடனம் ஆடும் வீடியோ வைரலாகி உள்ளது.
ஏ.ஐ நடனம்
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதில் முதற்கட்டம் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி அன்று 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்றும் 2ம் கட்டம் 88 தொகுதிகளுக்கு நடைபெற்றது.
இதை தொடர்ந்து, அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவை, குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 93 மக்களவைத் தொகுதிகளுக்கான, மூன்றாவது கட்டத் தேர்தல் நடந்தது.
இதற்கிடையில், தலைவர்களை கிண்டல் செய்யும்வகையில் வலைத்தளங்களில் மீம்கள், போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவை பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தி பிரதமர் மோடி ஆடுவது போன்ற வீடியோ படு வைரலானது. இதற்கு அவரே வரவேற்பு தெரிவித்துள்ள நிகழ்வு வலைத்தளங்களில் நடந்துள்ளது.
பிரதமர் மோடி
எக்ஸ் தளத்தில் இந்த ஏ.ஐ வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஆரஞ்சு நிற மேல்சட்டை அணிந்துள்ள பிரதமர் மோடி வளைந்து நெளிந்து நடனம் ஆடியவாறு பிரமாண்ட மேடைக்கு வருகிறார். பின்னர் கோடிக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் துள்ளலான இசைக்கு குத்தாட்டம் போடுவதுபோல் உள்ளது.
மேலும், "இந்த பதிவுக்கு நான் கைது செய்யப்பட மாட்டேன் என நம்புகிறேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு காட்டுத்தீ போல் பரவியது. இந்த நிலையில், இந்த பதிவை பார்த்த மோடியே வரவேற்பு அளித்துள்ளார்.
இது குறித்து தனது இணையத் தளப்பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "உங்களைபோல நானும் இதனை வெகுவாக ரசித்தேன். உச்சக்கட்ட வாக்கெடுப்பு காலத்தில் இத்தகைய படைப்பாற்றல் மகிழ்ச்சி அளிக்கிறது!" என்று குறிப்பிட்டுள்ளார்.