பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட்டது இதற்காக தான் - எல்.முருகன் விளக்கம்!

Tamil nadu BJP Narendra Modi
By Jiyath Jun 01, 2024 01:15 PM GMT
Report

பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட்டது தொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியுள்ளார். 

பிரகாஷ் ராஜ் 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரகாஷ் ராஜிடம், கன்னியாகுமரில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் "பொதுவாக படப்பிடிப்புகளுக்கு பார்வையாளர்கள் வருவதை பார்த்திருக்கிறேன்.

பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட்டது இதற்காக தான் - எல்.முருகன் விளக்கம்! | Pm Modi Medication L Murugan Explanation

ஆனால், கன்னியாகுமரியில் நடக்கும் படப்பிடிப்புக்கு பிரதமர் அவராகவே பார்வையாளர்களை அழைத்துச் சென்றுள்ளார்" என்று விமர்சனம் செய்தார். இந்நிலையில் பிரகாஷ்ராஜின் விமர்சனத்திற்கு பதிலளித்த நீலகிரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளரும்,

கருத்துக்கணிப்பு அல்ல.. மோடியின் கற்பனை கணிப்பு - ராகுல் காந்தி விமர்சனம்!

கருத்துக்கணிப்பு அல்ல.. மோடியின் கற்பனை கணிப்பு - ராகுல் காந்தி விமர்சனம்!

எல்.முருகன்

மத்திய அமைச்சருமான எல்.முருகன் "பிரகாஷ் ராஜிடம் வேறு எதை நாம் எதிர்பார்க்க முடியும்? இந்த நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகத்தின் நன்மைக்காவும்தான் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டார்.

பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட்டது இதற்காக தான் - எல்.முருகன் விளக்கம்! | Pm Modi Medication L Murugan Explanation

அவர் தியானத்தில் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல. அவர் சிறுவயது முதலே ஆன்மீகத்தில் மிகவும் பற்று கொண்டவராக இருந்திருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.