உக்ரைன் பயணம்; 20 மணி நேரம் ரயிலில் செல்லும் மோடி - என்ன காரணம்?
பிரதமர் மோடி உக்ரைனுக்கு ரயிலில் 20 மணிநேரம் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பிரதமர் மோடி
ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தக உறவை வளர்த்துக்கொள்ளவும் இந்தியா போலந்துடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருகிறது.
இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறை பயணமாக போலந்து சென்றுள்ளார். சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர் 1979ல் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் போலந்து சென்றிருந்தார்.
அதன் பின்னர் போலந்து சென்ற முதல் பிரதமர் என்கிற பெருமையை மோடி பெற்றுள்ளார். அதையடுத்து, நேற்றோடு போலந்து பயணத்தை முடித்துக்கொண்ட மோடி, அங்கிருந்து `ரயில் ஃபோர்ஸ் ஒன் (Rail Force One)' எனும் ரயிலில் 20 மணிநேரம் பயணம் மேற்கொண்டு உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்குச் செல்கிறார்.
உக்ரைன் பயணம்
பாதுகாப்புக்கு மட்டும் பிரத்யேகமாக, கவச ஜன்னல்கள், கண்காணிப்பு அமைப்புகள், பாதுகாப்பான தகவல் தொடர்பு நெட்வொர்க், சிறப்பு பாதுகாப்புப் பணியாளர்கள் குழு ஆகிய வசதிகள் இந்த ரயிலில் இருக்கிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உட்பட அனைத்து முக்கிய தலைவர்களும் வெளிநாட்டு பயணங்களுக்கு இந்த ரயிலையே பயன்படுத்துகின்றனர்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனான இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று கூறப்படுகிறது.