45 ஆண்டுகளுக்கு பிறகு.. போலந்து செல்லும் பிரதமர் மோடி - காரணம் இதுதான்!
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக போலந்து புறப்படுகிறார்.
பிரதமர் மோடி
ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தக உறவை வளர்த்துக்கொள்ளவும் இந்தியா போலந்துடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருகிறது.
இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறை பயணமாக போலந்து செல்கிறார். சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர் 1979ல் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் போலந்து சென்றிருந்தார்.
அதன் பின்னர் போலந்து செல்லும் முதல் பிரதமர் என்கிற பெருமையை மோடி பெறுகிறார். இந்த பயணத்தின்போது, புவிசார் அரசியல் பிரச்சினைகள், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலந்து பயணம்
கடந்த ஜூன் மாதம் நடந்த ஜி7 மாநாட்டில் மோடியை சந்தித்த செலன்ஸ்கி உக்ரைன் வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். உக்ரைனில் போருக்கு பின் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. சாலைப்போக்குவரத்து ஆபத்தானதாக உள்ளது.
எனவே, போலந்திற்கு 2 நாள் செல்லும் பிரதமர் அடுத்து அங்கிருந்து ரயிலில் 10 மணி நேரம் பயணித்து 23ஆம் தேதி உக்ரைன் செல்கிறார்.
ரஷ்யாவுடன் நீடித்து வரும் போருக்கு அமைதியான தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்கவுள்ளார்.
பிரதமரின் இப்பயணம் வரலாற்றுச்சிறப்பு மிக்க மைல் கல் பயணம் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.