எனக்கும் அவருக்கும் பெரிய வித்தியாசம் இல்ல -மோடியின் அசல் தோற்றத்தில் டூப்
பிரதமர் மோடியை போன்ற முகப்பாவனையில் இருக்கும் நபர் ஒருவரின் வீடியோ வைரலாகி வருகிறது.
மோடி
பிரதமர் மோடியை போன்றே இருப்பவர் ஆச்சர்யத்தை கிளப்பியுள்ளார். இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை போன்றே அச்சு அசலாக இருக்கும் ஒருவர், பானி பூரி விற்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.

முக அமைப்பில் மட்டுமின்றி, தாடி, மீசை, சட்டை என அனைத்திலும் மோடியை போலவே இருந்ததால், பலரும் குழப்பமடைந்தனர். அனில் பாய் தாக்கர் என்ற இவருக்கும், பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் குஜராத் தான் என்பது தெரியவந்தது.
அதே தோற்றத்தில் வியாபாரி
அந்த வீடியோவில், பிரதமர் மோடியை போன்ற மஞ்சள் மேற்சட்டையை அணிந்து, பானி பூரி விற்கிறார். அதில் பேசிய அவர், "அவர் டீ விற்றார். நான் பானி பூரி விற்கிறேன். பெரிதாக எங்களுக்கு இடையே வித்தியாசமில்லை.
மோடியை போன்றே எனது பக்கவாட்டு தோற்றம் இருக்கும். அவரை போன்றே மேக் அப் செய்துகொண்டேன்" என்றார்.
இதனை பார்த்த பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அதில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நீங்களே நடிக்கலாம்; முயற்சித்து பாருங்கள் என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்.