‘நாங்க இருக்கோம்...’ துருக்கி மக்களுடன் இந்தியா உறுதியாக நிற்கும்... - பிரதமர் மோடி டுவிட்...!

Twitter Narendra Modi Syria Turkey Earthquake
By Nandhini Feb 11, 2023 08:03 AM GMT
Report

துருக்கி மக்களுடன் இந்தியா உறுதியாக நிற்கும் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

துருக்கி நிலநடுக்கம்

கடந்த திங்கள்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 24 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

‘ஆபரேஷன் தோஸ்த்’ திட்டம் ‘

ஆபரேஷன் தோஸ்த்’ திட்டத்தின் கீழ் துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணப் பணிகளுக்காக மீட்புப் பணியாளர்கள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஏற்றிச் செல்லும் 6 விமானங்களை இந்தியா அனுப்பியது.

கடந்த வியாழன் அன்று காசியான்டெப் மாகாணத்தின் நூர்டாகி நகரில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளிலிருந்து 6 வயது சிறுமியை NDRF வீரர்கள் உயிருடன் மீட்டனர். “NDRF மீட்புக்குழுவினர் இதுவரை 08 இறந்த உடல்களை இடிபாடுகளில் இருந்து மீட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் என்.டி.ஆர்.எஃப் மூலம் மீட்பு பணி கடந்த பிப்ரவரி 7-ம் தேதி முதல் பணியை தொடர்ந்து செய்து வருகிறது. மீட்பு நடவடிக்கை மற்றும் சம்பந்தப்பட்ட தளவாடங்கள் டெல்லியில் உள்ள DG NDRFல் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

turkey-earthquake-modi-twitter

இந்தியா உறுதியாக நிற்கும் - பிரதமர் டுவிட்

இந்நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘ஆபரேஷன் தோஸ்த்’ திட்டத்தின் ஒரு பகுதியாக எங்கள் குழுக்கள் இரவும் பகலும் உழைக்கின்றன. இந்த இக்கட்டான நேரத்தில், இந்தியா துருக்கிய மக்களுடன் உறுதியாக நிற்கிறது என்று பதிவிட்டுள்ளார்.