திடீரென ரூ.90 நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி - இப்படி ஒரு சிறப்பா..?
நாட்டின் பிரதமர் மோடி ரூ.90 நாணயத்தை வெளியிட்டுள்ளார்.
பாஜக - பணம்
பாஜக அரசின் மறக்கமுடியாத நடவடிக்கைகளில் ஒன்று பணமதிப்பிழப்பு. 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என இரவோடு இரவாக அறிவித்து, அதற்கு மாற்றாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் வந்தன.
தற்போது அந்த 2000 ரூபாயும் திரும்பபெறப்பட்ட நிலையில், 500 ரூபாய் மட்டுமே புழக்கத்தில் உள்ளது. இருப்பினும் Digital இந்தியா மூலம் பெரும்பாலான மக்கள் கையில் பணமில்லாமல், அக்கௌன்ட் மட்டுமே வைத்து பயணித்து வருகிறார்கள்.
90 ரூபாய்
இவ்வாறு இருக்கும் சூழலில், நேற்று(1.4.2024) நாட்டின் பிரதமர் மோடி 90 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். ரிசர்வ் வங்கியின் 90வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 90 ரூபாய் மதிப்புள்ள சிறப்பு நாணயத்தை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
99.99% தூய வெள்ளி மற்றும் சுமார் 40 கிராம் எடை கொண்ட இந்த தனித்துவமான நினைவு நாணயம், ஒன்பது தசாப்தங்களாக நீடித்திருக்கும் ரிசர்வ் வங்கியின் வளமான வரலாற்றையும் சாதனைகளையும் குறிக்கிறது.