பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை - பிரதமர் மோடி பேச்சு
பயங்கரவாதிகளால் இந்தியாவை ஒருபோதும் வீழ்த்த முடியாது
பிரதமர் மோடி
கார்கில் போரின் 25 ஆவது ஆண்டு தினம் இன்று கொண்டப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி கார்கில் சென்று உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் ராணுவ வீரர்களையும் சந்தித்து பேசினார்.
அப்போது பேசியவர் ,''கார்கில் போரின் போது ராணுவ வீரர்கள் செய்த தியாகம் அளப்பரியது இதனை நாடும் நாட்டு மக்களும் அவர்களுக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ,'' பாகிஸ்தான் தனது தவறுகளில் இருந்து இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றார்.
பாகிஸ்தான்
பயங்கரவாதிகளால் இந்தியாவை ஒருபோதும் வீழ்த்த முடியாது என தெரிவித்த பிரதமர் மோடி பயங்கரவாதத்தை தூண்டி விடுபவர்களின் திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது என்று எச்சரித்தார்.
மேலும் பயங்கரவாதத்தின் ஒவ்வொரு முயற்சியையும் இந்தியா வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.குறிப்பாக லடாக்கில் இயல்பு வாழ்க்கை திரும்ப அனைத்து முயற்சிகளையும்மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.