Monday, Mar 31, 2025

தேர்தலில் தோல்வியடைந்த ரிஷி சுனக் - வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் மோடி

Narendra Modi United Kingdom India Rishi Sunak
By Karthick 9 months ago
Report

நடைபெற்று முடிந்த பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் பிரதமர் ரிஷி சுனக்கின் consevative கட்சி தோல்வியடைந்துள்ளது.

பிரிட்டன் தேர்தல்

உலகத்தில் முன்னணி நாடக விளங்கும் பிரிட்டன் நாட்டின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. 650 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த தொழிலாளர் கட்சி பெறும் வெற்றியை பெற்றுள்ளது.

keir starmer

அக்கட்சியின் கியர் ஸ்டாமேர் நாட்டின் அடுத்த பிரதமராகிறார். இந்த தேர்தல் முடிவுகளை குறித்து இந்திய பிரதமர் மோடி சமூகவலைதளபதிவுகளை வெளியிட்டுள்ளார்.

யார் இந்த தமிழ் வம்சாவளி உமா குமரன்- இங்கிலாந்து நாட்டின் எம்.பி.யாக தேர்வு!

யார் இந்த தமிழ் வம்சாவளி உமா குமரன்- இங்கிலாந்து நாட்டின் எம்.பி.யாக தேர்வு!


மோடி வாழ்த்து 

அதில், மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நல்வாழ்த்துக்கள் @Keir_Starmer. இங்கிலாந்து பொதுத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பற்றி.

பரஸ்பர வளர்ச்சி மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து துறைகளிலும் இந்தியா-இங்கிலாந்து விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த எங்களின் நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை நான் எதிர்நோக்குகிறேன்.

RIshi sunak modi

மேலும், தோல்வியடைந்த ரிஷி சுனக் குறித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,

நன்றி @ரிஷி சுனக். இங்கிலாந்தின் போற்றத்தக்க தலைமைத்துவத்திற்காகவும், உங்கள் பதவிக் காலத்தில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான உறவுகளை ஆழப்படுத்த உங்களின் தீவிர பங்களிப்புக்காகவும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.