பிரபல பாடகியுடன் இணைந்து பாடல் எழுதிய பிரதமர் மோடி - வைரலாகும் பாடல்!

Narendra Modi
By Sumathi Jun 18, 2023 04:19 AM GMT
Report

பாடகி ஃபல்குனி ஷாவுடன் இணைந்து, பிரதமர் மோடி பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.

பிரதமர் மோடி

மும்பையில் பிறந்தவர் பாடகி ஃபல்குனி ஷா. அமெரிக்காவில் வசித்து வருகிறார். எ கலர்ஃபுல் வேர்ல்டுக்கான 64வது கிராமி விருதில் சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்பம் விருதை வென்றார்.

பிரபல பாடகியுடன் இணைந்து பாடல் எழுதிய பிரதமர் மோடி - வைரலாகும் பாடல்! | Pm Modi Collaborates With Grammy Winner Falu Song

இந்நிலையில், ஃபல்குனி ஷா, அவரது கணவர் கவ்ரவ் ஷா ஆகியோருடன் இணைந்து "சிறு தானியங்களில் குவிந்து கிடப்பவை" என்ற தலைப்பில் பிரதமர் மோடி பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.

பாடல் வெளியீடு

பசியை போக்குவதில் சிறு தானியத்தின் பங்கு என்ன என்பதை பற்றி விளக்கும் வகையில், ஆங்கிலம் மற்றும் இந்தியில் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு நடுவே மோடியின் பேச்சு இடம் பெற்றுள்ளதாகவும், அதையும் மோடியே எழுதி பேசியுள்ளதாகவும் பாடகி தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகியுடன் இணைந்து பாடல் எழுதிய பிரதமர் மோடி - வைரலாகும் பாடல்! | Pm Modi Collaborates With Grammy Winner Falu Song

முன்னதாக இந்தியாவின் பரிந்துரையை ஏற்று, நடப்பாண்டை, சிறுதானிய ஆண்டாக ஐ.நா., சபை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.