தமிழகம் வரும் பிரதமர்; பிரம்மாண்ட விழாவில் முதல்வருடன் பங்கேற்பு - எங்கு தெரியுமா?

M K Stalin Narendra Modi Thoothukudi
By Sumathi Feb 23, 2024 05:44 AM GMT
Report

பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப் பயணமாக தமிழகம் வருகை தருகிறார்.

பிரதமர் மோடி 

தமிழகத்தில் பிரதமர் மோடி வரும் 27, 28-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 27ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

modi - stalin

பின், சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தங்குகிறார். தொடர்ந்து, குலசேகரன்பட்டினத்தில் 2,233 ஏக்கரில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி வஉசி துறைமுக வளாகத்தில் நடைபெறுகிறது.

ரூ.777 கோடி; 2 வருஷம் கூட முடியல.. அதற்குள் விரிசல் - பிரதமர் மோடி திறந்த வைத்த சுரங்கப்பாதை!

ரூ.777 கோடி; 2 வருஷம் கூட முடியல.. அதற்குள் விரிசல் - பிரதமர் மோடி திறந்த வைத்த சுரங்கப்பாதை!

தமிழக வருகை

அதில் பங்கேற்று 28ஆம் தேதி மோடி ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி, வஉசி துறைமுக விரிவாக்கப் பணி உள்ளிட்ட பணிகளைத் தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், பிரதமர் உடன் இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார்.

pm modi

அதனையடுத்து ராமேஸ்வரம் புதிய பாம்பன் ரெயில்வே பாலத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். நெல்லையில் பாஜக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். அதன் முடிவில் ஹெலிகாப்டர் மூலமாக கேரளாவிற்கு செல்கிறார்.