33 ஆண்டுகளுக்கு முன்.. இளம் தலைவராக வந்த மோடி - வைரலாகும் க்ளிக்ஸ்!
பிரதமர் மோடி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானத்தை தொடங்கியுள்ளார்.
பிரதமர் மோடி
கன்னியாகுமரி, விவேகானந்தர் மண்டபத்தின் பின்பகுதியில் உள்ள தியான அரங்குக்கு சென்ற பிரதமர் மோடி நேற்று முதல் (30.5.24) தியானத்தை தொடங்கியுள்ளார்.
அப்போது அவருக்கு இளநீர் வழங்கப்பட்டது. அதனை குடித்துவிட்டு இரவு வரை தியானத்தை தொடர்ந்தார். இன்று (31.5) 2-வது நாளாக தியானத்தை தொடங்கவுள்ளார்.
கன்னியாகுமரி விசிட்
முன்பாக காலையில் உதயமாகும் மண்டபத்தில் இருந்தபடி சூரிய உதயத்தை பார்வையிட்டார். இந்த தியானத்தை 3 நாட்கள் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடி கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்னர், இதே விவேகானந்தர் நினைவிடத்துக்கு வந்துள்ளார்.
அப்போது அவர் அங்குள்ள விவேகானந்தர் சிலையை பார்வையிடும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. கடந்த 1991ல் பாஜக மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி, ஏக்தா யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகருக்கு தேசிய கொடி யாத்திரையை தொடங்கினார்.
அதற்கு முன் விவேகானந்தர் பாறைக்கு வந்த அவருடன், அப்போது இளம் தலைவராக இருந்த மோடியும் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பிரதமரின் வருகையை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.