ராமர் கோவில் கும்பாபிஷேகம்..! 11 நாட்கள் சிறப்பு பூஜை..! தயாராகும் பிரதமர் மோடி..!

Narendra Modi Uttar Pradesh India
By Karthick Jan 12, 2024 04:28 AM GMT
Report

வரும் 22-ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவிலை நாட்டின் பிரதமர் மோடி திறந்துவைக்கவுள்ளார்.

அயோத்தி ராமர் கோவில்

உத்தரபிரதேச மாநிலத்தில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக ராமர் கோவில் குறித்து பெரும் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் பாஜக, கடந்த சில ஆண்டுகளாக கோவில் திருப்பி பெரும் கவனத்தை செலுத்தியது.

pm-modi-began-11-day-pooja-for-ram-temple

நாட்டிலுள்ள பெரும் முக்கிய புள்ளிகளுக்கு அழைத்து விடுக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 22- ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக ராமர் கோவில் திறப்பு நிகழவுள்ளது. நாட்டின் கவனத்தை அதன் பக்கம் வெகுவாக திருப்பியுள்ளது பாஜக அரசு.

11 நாட்கள்

இந்நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த எக்ஸ் தள பதிவில், அயோத்தியில் ராம்லாலாவின் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன.

இந்த சுபநிகழ்ச்சிக்கு நானும் சாட்சியாக இருப்பதில் நான் அதிர்ஷ்டசாலி. கும்பாபிஷேகத்தின் போது இந்திய மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்த இறைவன் என்னை ஒரு கருவியாக ஆக்கியுள்ளார். இதை மனதில் வைத்து இன்று முதல் 11 நாட்கள் சிறப்பு பூஜையை தொடங்குகிறேன்.

கால் வலிக்கிறது - ராமர் கோவில் போவீர்களா... ? எடப்பாடி நச் பதில்..!!

கால் வலிக்கிறது - ராமர் கோவில் போவீர்களா... ? எடப்பாடி நச் பதில்..!!

அனைத்து மக்களிடமும் ஆசிர்வாதம் தேடுகிறேன். இந்த நேரத்தில், என் உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது மிகவும் கடினம், ஆனால் நான் என் பக்கத்திலிருந்து முயற்சித்தேன் .