கால் வலிக்கிறது - ராமர் கோவில் போவீர்களா... ? எடப்பாடி நச் பதில்..!!

Tamil nadu ADMK AIADMK Edappadi K. Palaniswami
By Karthick Jan 11, 2024 12:05 PM GMT
Report

வரும் 22- ஆம் தேதி ராமர் கோவில் உத்தரபிரதேச மாநிலத்தில் பிரமாண்டமாக திறக்கப்படவுள்ளது.

ராமர் கோவில்

மிக பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு வரும் 22-ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

eps-replies-in-ramar-kovil-participation

நாட்டின் முக்கிய பிரமுகர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பிரதமர் மோடி இந்த கோவிலை திறந்து வைக்கவுள்ளார். எடப்பாடி பதில் இதில், அதிமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை குறித்து அதிமுக தரப்பில் இருந்து எந்த தகவலும் இல்லை.

கால் வலிக்கிறது

ஜெயகுமாரிடம் செய்தியாளர்கள் வினவிய போது, கட்சியின் தலைமை இது குறித்து முடிவெடுக்கும் என கூறியிருந்தார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடமும் இது குறித்து வினவப்பட்டது.

eps-replies-in-ramar-kovil-participation

அப்போது பதிலளித்த அவர், அந்நிகழ்வில் யார் வேண்டுமென்றாலும் பங்கேற்கலாம் என்று குறிப்பிட்டு, ஆனால் ஜாதி மாதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக என்றார்.

பழனிசாமியே பதவியை ராஜினாமா செய்யணும்...இல்லனா..!! எச்சரிக்கும் ஓபிஎஸ்

பழனிசாமியே பதவியை ராஜினாமா செய்யணும்...இல்லனா..!! எச்சரிக்கும் ஓபிஎஸ்

மேலும், திறப்பு விழாவில் வாய்ப்பிருந்தால் பங்கேற்பேன் என்ற அவர், தனக்கு கால் வலி இருப்பதால் பங்கேற்பது குறித்து பொறுத்திருந்து முடிவெடுப்பதாக கூறினார்.