கடவுள் ராமரை விட பெரியவர்களா? அம்பேத்கர் வந்தாலும் அது நடக்காது - பிரதமர் மோடி!
கடவுள் ராமரை விட தன்னை பெயரிதாக காங்கிரஸ் நினைக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்தி என்ற இடத்தில் பாஜகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி "பாஜக தலைமையிலான அரசு மீண்டும் 3-வது முறையாக ஆட்சி அமைக்க உங்களுடைய ஆசீர்வாதத்தை பெற நான் இங்கே வந்துள்ளேன்.

மோடியின் ஒவ்வொரு உத்தரவாதத்திற்கும் சத்தீஸ்கர் மக்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். அயோத்தியில் ராமர் கோவில் ஒருபோதும் கட்ட முடியாது என எல்லோரும் நினைத்தனர்.
அது நடக்காது
ஆனால், பா.ஜனதா அயோத்தி ராமர் கோவிலை கட்டியது. ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை புறக்கணித்து காங்கிரஸ் தலைவர்கள் புனிதர்களை அவமதித்தனர். கடவுள் ராமரை விட தன்னை பெயரிதாக காங்கிரஸ் நினைக்கிறது.

மோடிக்கு யாராலும் தீங்கு விளைவிக்க முடியாது. லட்சக்கணக்கான தாய்மார்களும் நாட்டு மக்களும் மோடியின் பாதுகாப்புக் கவசமாக உள்ளனர். யாராலும் அரசமைப்பை மாற்ற முடியாது. அம்பேத்கர் வந்து வலியுறுத்தினாலும் கூட அது நடக்காது" என்று தெரிவித்துள்ளார்.
அருங்காட்சியகத்திற்கு வழங்கப்படவுள்ள விடுதலைப் புலிகள் தலைவரின் நினைவுப் பரிசு! நீதிமன்றின் விசேட உத்தரவு IBC Tamil
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan