’மோடியின் குடும்பம்’ என்பதை நீக்குங்கள் - திடீரென வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி!

Narendra Modi Delhi
By Sumathi Jun 12, 2024 06:59 AM GMT
Report

சமூக வலைத்தள கணக்குகளில் 'மோடியின் குடும்பம்' என்பதை நீக்கி விடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலூ பிரசாத் யாதவ், தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என விமர்சித்தார்.

pm modi

இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், ஒட்டு மொத்த இந்திய மக்களும் தனது குடும்பம் என பதிலடி கொடுத்தார். தொடர்ந்து, அதனை ஆதரிக்கும் விதமாக பாஜக சேர்ந்தவர்கள், சமூக வலைத்தளங்களில் தங்களை மோடியின் குடும்பம் என்று அடையாளப்படுத்திக் கொண்டனர்.

இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தேர்தல் பிரசாரத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சமூக வலைத்தள கணக்குகளில் என் மீதான பாசத்தின் அடையாளமாக தனது பெயருக்கு பின் மோடியின் குடும்பம் என சேர்த்தனர்.

காங்கிரஸ் அழிகிறது.. பாகிஸ்தான் அழுகிறது; இதுதான் காரணம் - பிரதமர் மோடி தாக்கு!

காங்கிரஸ் அழிகிறது.. பாகிஸ்தான் அழுகிறது; இதுதான் காரணம் - பிரதமர் மோடி தாக்கு!

ஒரே குடும்பம்

நான் அதிலிருந்து நிறைய பலம் பெற்றேன். இந்திய மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தொடர்ந்து 3-வது முறையாக பெரும்பான்மையை வழங்கியுள்ளனர். இது ஒரு சாதனையாகும். மேலும் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஆணையை அவர்கள் நமக்கு வழங்கியுள்ளனர்.

நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி திறம்பட தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் உங்கள் சமூக ஊடக கணக்குகளில் இருந்து மோடியின் குடும்பம் என்பதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பெயர்கள் மாறலாம். ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் நம் ஒரே குடும்பம் என்ற உறவு எப்போதும் வலிமையாகவும், உடைக்கப்படாமலும் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.