தமிழக அரசு கேட்டது ரூ.5,060 கோடி - மத்திய அரசு ரூ.450 கோடி அறிவிப்பு!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதமிழகத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்பு
தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ. 5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இதனிடையே, மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். தொடர்ந்து, பிரதமர் மோடி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வழியாக வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளின் விவரங்களை கேட்டறிந்து மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும் என உறுதியளித்தார்.
ரூ.450 கோடி ஒதுக்கீடு
இந்நிலையில், முதற்கட்டமாக ரூ.450 கோடி நிதியை தமிழ்நட்டிற்கு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமித்ஷா தனது X தள பக்கத்தில், புயலால் தேவையான நிவாரணங்களை நிர்வகிப்பதில் மாநில அரசுகளுக்கு உதவ, ரூ.493.60 கோடி ஆந்திராவுக்கும்,
ரூ.450 கோடி தமிழ்நாட்டிற்கும் முன்கூட்டியே வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன். விரைவில் நிலைமை சீரடைவதை உறுதி செய்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Severe cyclonic storm Michaung has affected Tamil Nadu and Andhra Pradesh. Though the extent of damage is varied, many areas of these states are inundated, thus affecting standing crops.
— Amit Shah (@AmitShah) December 7, 2023
To help the state Governments with the management of relief necessitated by the cyclonic…