ஆளுநருடன் சேர்ந்து பிரதமரும் எங்களுக்காக பிரசாரம் செய்கிறார் - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஆளுநருடன் சேர்ந்து பிரதமரும் தங்களுக்காக பிரசாரம் செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிக்கை
சென்னை அண்ணா அறிவாலயத்தில், மக்களவை தேர்தலுக்கான அறிக்கையை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் "தோல்வி பயம் காரணமாக பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார்.
இப்போது தேர்தல் நேரத்தில் வரும் பாரத பிரதமர், தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்பு வந்தபோது, இங்கு வந்து ஆறுதல் சொல்லி இருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். எங்களுக்கு பிரசாரம் செய்வதற்கு ஆளுநரே போதும்.
பிரதமர் பிரசாரம்
இப்போது பிரதமரும் எங்களுக்கு பிரசாரம் செய்கிறார். இருவரும் சேர்ந்து திமுகவிற்கு பெரிய வெற்றியை தேடி தருவார்கள் என்பது உண்மை. திமுகவில் வாரிசு அடிப்படையில் பதவி கொடுப்பது இல்லை.
உழைப்பின் அடிப்படையில் பணி கொடுக்கிறோம். பாஜக வளர்ந்து வருவதாக அவர்கள் சொல்லி வருகிறார்கள். யார் நோட்டாவைவிட குறைவாக வாக்குகள் பெறுகிறார்கள் என்று தேர்தலுக்கு பின் தெரியும்" என்றார்