பிளஸ்2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பா? உதயநிதி தகவல்!
பிளஸ்2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பது குறித்து அமைச்சர் உதயநிதி தகவல் தெரிவித்துள்ளார்.
பிளஸ்2 தேர்வு
தமிழகத்தில் 2022-2023-ம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ - மாணவிகளும், தனி தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 தேர்வு எழுதினர்.
இந்த நிலையில், மொழிப்பாடத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 50,674 மாணவர்கள் எழுதவில்லை என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்தது.
உதயநிதி தகவல்
இவ்வளவு பேர் எழுதாதது கல்வித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து அமைச்சர் உதயநிதி, பிளஸ்2 பொதுத்தேர்வில் மொழிப்பாடத்தேர்வை எழுதாத
மாணவர்களுக்கு மீண்டும் எழுத வாய்ப்பு வழங்க கல்வி அமைச்சரிடம் பேசி வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.