இன்பநிதி அந்தரங்க புகைப்பட விவகாரம் - உதயநிதி அதிரடி பதில்
இன்பநிதி அந்தரங்க புகைப்பட சர்ச்சைக்கு உதயநிதி பதிலளித்துள்ளார்.
புகைப்பட சர்ச்சை
இன்பநிதி தனது தோழியுடன் இருப்பது போன்ற பர்சனல் புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து உதயநிதி விளக்கமளித்துள்ளார்.
அதில், “ அவருக்கு 18 வயது ஆகி விட்டது. அவன் இப்போது இளைஞர். அது அவருடைய பர்சனல் வாழ்கை. அது எனக்கும், கிருத்திகா மற்றும் என்னுடைய மகன் சம்பந்தப்பட்ட விஷயம். அதை நான் வெளியே சொல்ல விரும்பவில்லை. இந்த மாதிர்யான குடும்பத்தில் இருப்பதால் சில குற்றசாட்டுகள் வரத்தான் செய்யும்.
உதயநிதி பதில்
அதற்கான புரிதல் இன்பநிதிக்கு இருக்கும் பட்சத்தில், அதை அவர் பார்த்துக்கொள்ளட்டும். அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை. அந்த விஷயத்தில் என்னுடைய எல்லைக்கு அதிகமாக நானே அதில் தலையிட விரும்பவில்லை. அது அவருக்கான சுதந்திரம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, “நேசிக்கவும், அதை வெளிப்படுத்தவும் பயப்பட வேண்டாம். இயற்கையை அதன் முழு மேன்மையுடன் புரிந்துகொள்வதற்கான வழிகளில் இதுவும் ஒன்று” என கிருத்திகா பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.