பள்ளி மாணவர்கள் தாக்கியதில் +2 மாணவர் காது கிழிந்த கொடூரம்- பகீர் பின்னணி!
மாணவர்கள் தாக்கியதில் பிளஸ்-2 மாணவர் காது கிழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம்
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள குன்னம்குளம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.
இந்த விடுதியில் கடந்த 18ம் தேதி இரவு 17 வயது பிளஸ் டூ மாணவன் ஒருவன் 10ம் வகுப்பு ஜூனியர் மாணவர்களால் தாக்கப்பட்டான்.இந்த தாக்குதலின் போது அவனது இடது காதின் ஒரு பகுதி கிழிந்தது. அதன் பிறகு பள்ளி மாணவனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பட்டார்.
இதனையடுத்து தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்துப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.அப்போது இந்த சம்பவத்தைப் பெற்றோரிடம் தெரிவிக்கக் கூடாது என விடுதி வார்டன் மற்றும் அதிகாரிகள் சொன்னதாக கூறியுள்ளார்.
தாக்குதல்
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளியின் கவனக்குறைவால்,இந்த பிரச்சனை நடந்தாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குடும்பத்தினரின் புகாரின் அடிப்படையில், சைல்டு லைன் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.
இருப்பினும், பள்ளி விடுதியில் வார்டன் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளார். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.