பஸ் ஸ்டாண்டால் எகிறிய விலை...!! கிளாம்பாக்கத்தில் ஒரு சதுர அடி எவ்ளோ'னு தெரியுமா..?
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் பஸ் முனையம் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதியை சுற்றி மனையின் விலை அதிகரித்துள்ளது.
கிளாம்பாக்கம்
கோயம்பேட்டில் இருந்து பேருந்து நிலையத்தால் சென்னை மாநகரில் பெருமளவில் போக்குவரத்து நெரிசல் உண்டான காரணத்தால், சென்னை அருகில் நகர் பகுதிக்கு வெளியே புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு மக்களின் சேவைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அனைத்து திட்டங்களை போல, தற்போது இதற்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்புகள் வந்தாலும், மக்களை மெல்ல இதனை ஏற்றுக்கொள்வார்கள்.
வண்டலூரை அடுத்த சிறிய கிராமமான கிளாம்பாக்கம், பேருந்து முனையத்திற்காக தேர்வு செய்ய ப்பட்ட போது, அந்த பகுதிகளில் ஒரு சதுர அடி மனையின் விலை சுமார் 250 ரூபாய் வரை இருந்துள்ளது.
அரசின் அறிவிப்பு வெளியான நிலையில், அந்த விலை 400 முதல் 500 ரூபாய் வரை சென்றுள்ளது. ஆனால், தற்போது பேருந்து முனையம் திறக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த பகுதிகளில் ஒரு சதுர அடி மனையின் விலை, சுமார் 2500 ரூபாய் வரை உச்சம் தொட்டுள்ளது என்று அப்பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் கூறுகின்றனர்.
சென்னையை தாண்டிய புறநகர் பகுதி என்பதால், தற்போது வளரத்துவங்கியுள்ள கிளாம்பாக்கம், சிறிது காலத்தில் எப்படி கோயம்பேடு வந்த பிறகு பூந்தமல்லி அசுர வளர்ச்சியை கண்டதோ அது போன்று நல்ல வளர்ச்சியை கண்டுவிடும் என்று பலர் கணிக்கின்றனர்.