வா.. வா..என அழைத்து இளைஞர்கள் செய்த காரியம்; பாய்ந்த சிறுத்தை - 3 பேருக்கு நேர்ந்த கதி!
சிறுத்தை பாய்ந்து வந்து கடித்ததில் மூன்று இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.
இளைஞர்கள்
மத்திய பிரதேசத்தில், உதவி சப்-இன்ஸ்பெக்டர் நிதின் சம்தாரியா, ஆகாஷ் குஷ்வாஹா (23) மற்றும் நந்தினி சிங் (25) ஆகியோர் ஷாதோல் மாவட்டத்தில் உள்ள கோபாரு மற்றும் ஜெய்த்பூர் காடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
இவர்களுடன் சேர்ந்து சுமார் 50-60 பேர் சுற்றுலா வந்துள்ளனர். அப்போது காட்டில் இருந்த புதருக்குள் மறைந்திருந்த சிறுத்தையை "வா.. வா" என்று இவர்கள் விளையாட்டாக அழைத்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
சிறுத்தை
அந்த சமயத்தில் திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை இவர்களை கடுமையாக தாக்கியுள்ளது. பின்னர் சிறுத்தை அங்கிருந்து தப்பி வனப்பகுதிக்குள் ஓடியது.
#WATCH | Leopard Goes After Youth Picnicking With Friends In MP’s Shahdol; Video Surfaces#MadhyaPradesh #Leopard #MPNews pic.twitter.com/st5I5Ge7Kx
— Free Press Madhya Pradesh (@FreePressMP) October 21, 2024
இதில் படுகாயமடைந்த அந்த இளைஞர்கள் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இளைஞர்களை சிறுத்தை தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.